பதிவு செய்த நாள்
06
ஜூலை
2011
05:07
சிதம்பரம்:கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன தரிசன விழா, கடந்த 28ம் தேதி துவங்கியது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. 9ம் நாள் விழாவான தேரோட்டம், நடந்தது. மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமி சுந்தரி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு, காலை 8 மணிக்கு, தேர் நிலையில் இருந்து கிளம்பியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜா கோஷம் முழங்க, பக்தி பரவசத்துடன் தேர் இழுத்தனர்.பகல் 12 மணிக்கு, @தர்கள் மேல வீதி கஞ்சித்தொட்டியில் நிறுத்தப்பட்டு, பாரம்பரிய வழக்கப்படி, சடங்குகள் முடிந்த பிறகு, மாலை, தேர் நிலையை அடைந்தது. இரவு,தேரில் இருந்து நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள, லட்சார்ச்சனை நடந்தது.