ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அரியாண்கோட்டை (வடக்கு) சந்தன மாரியம்மன்,வரசித்தி விநாயகர்,பாலமுருகன் ஆகிய ஆலய கும்பாவிஷேக விழா நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.பின், கோபுர கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டடு விழா நிறைவுற்றது.ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஏ.ஆர்.மங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாவிஷேக விழா நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.