திருவெண்ணெய்நல்லூர்:பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி கோவில் தேர் வெள்ளோட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த சில மாதங்களாக புதிய தேர் செய்யும் பணி நடந்தது. பணிகள் முழுமையடைந்து வரும் 7ம் தேதி காலை 8:30 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.