தாயில்பட்டி: சாத்தூர் அருகே குகன்பாறை வடகாசியம்மன் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கும்பாபிஷேத்தன்று விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பின்னர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லூரி தாளாளர் சோலைசாமி, ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், வெம்பக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் சுசிலாராஜ்,மணிமந்திர வேல்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.