கனகம்மாசத்திரம்: லட்சுமி நாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருத்தணி அடுத்த ராமாபுரம் கிராமத்தில், புதியதாக லட்சுமி நாராயண சுவாமி கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று காலை, 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் மேல் அமைக்கப்பட்டுள்ள விமானத்தின் மீது புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் வீதியுலா நடந்தது.