சாயல்குடி:சாயல்குடி அருகே காணிக்கூர் பாதாள காளியம்மன் கோயிலில் பவுர்ணமி விளக்கு பூஜை நேற்று நடந்தது.
இதையொட்டி, நேற்று முன் இரவு 7மணி முதல் அம்மனுக்கு பால், நெய், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகங்கள் நடந்தன. தங்க கவசம் சாத்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 10 மணியளவில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.