எரியோடு: எரியோடு அய்யலூர் ரோட்டிலுள்ள பாவாடைக்காரம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கி, இரண்டு கால யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடாகி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. எரியோடு, வசந்தநகர், மயில்சாமி நகர், குரும்பபட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி பொது மக்கள்பங்கேற்றனர்.