பதிவு செய்த நாள்
09
ஜூன்
2015
11:06
தர்மபுரி : தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை, தட்சிணா காசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, இன்று (ஜூன், 9) நடக்கிறது. இதையொட்டி, காலை, 6 மணி முதல், பைரவர் ஹோமம், அஷ்ட லட்சுமி ஹோமம், குபேர ஹோமம், அதிருந்தர ஹோமமும் நடக்கிறது.ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு ராஜ அலங்காரம்,1,008 அர்ச்சனை நடக்கிறது. இரவு, 10 மணிக்கு, குருதியாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும், கோவில் சிவாச்சாரியர் கிருபாகரன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* காரிமங்கலம் கடைவீதியில் அமைந்துள்ள, கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இன்று (ஜூன், 9) காலை, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, சிவாச்சாரியர் புருஷோத்தமன், மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.