பழநி:பழநி மலைக்கோயில் “ரோப்கார்” பராமரிப்பு பணிகள் இறுதி கட்டமாக நேற்று முதல் கம்பிவட கயிற்றில் பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் 3 நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் இயக்கப்படுகிறது. இவ்வாண்டு பராமரிப்பு பணிகளுக்காக மே 8 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ரோப்கார் வல்லுனர் குழு பரிந்துரையின் பேரில் கம்பிவடக் கயிறுகள் பெட்டிகள் கழற்றி ஆயில் கிரீஸ் மாற்றினர். மேலும் ரோப்கார் மேல் தளம் கீழ்தளத்திலுள்ள மோட்டார் சாப்ட் களில் தேய்மான உதிரிபாகங்களை கண்டறிந்து புதிதாக மாற்றப்பட்டன.பராமரிப்பு பணியில் இறுதியாக நேற்று கம்பிவடக் கயிற்றில் பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடக்கிறது. இன்னும் 2 நாட்களில் ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளது.கோயில் அதிகாரிகள் கூறுகையில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் முடிந்துள்ளன. வெறும் பெட்டிகள் பொருத்தப்பட்டும் அதன்பின் குறிப்பிட்ட எடைக்கற்களை வைத்தும் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டு ரோப்கார் பாதுகாப்பு கமிட்டியினர் சான்றிதழ் வழங்கியபின் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ஒன்றிரண்டு நாட்களில் இயக்கப்பட உள்ளது என்றார்.