சின்னாளபட்டி: சின்னாளபட்டி வடக்கு தெரு, அங்காளபரமேஸ்வரி கோயிலில், கடந்த ஏப்ரலில் அங்காளபரமேஸ்வரி அம்மன், கருப்பணசாமி, நாகம்மாள், முனீஸ்வரர் ஆகிய தெய்வங்களின் சிலைகள் மற்றும் 21 தெய்வங்களின் பீடங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து 48 நாட்கள் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. நிறைவாக மண்டல பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வழிபாடு முடிந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் பூசாரிகள் பாலசுப்ரமணி, ஏ.ராமகிருஷ்ணன், என்.ராமகிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.