பொதட்டூர்பேட்டை: வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது; தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. பொதட்டூர்பேட்டை குடியானவர் வீதியில் உள்ளது வேணுகோபால சுவாமி கோவில். இந்த கோவில் சீரமைப்பு பணிகள், ஓராண்டாக நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலையில் உற்சவர் வீதியுலா எழுந்தருளினார். இதை தொடர்ந்து தினசரி மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது.