பதிவு செய்த நாள்
07
ஜூலை
2011
11:07
கடலூர் : கடலூர், புதுப்பாளையம் படவட்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. கடலூர், புதுப்பாளையம் படவட்டம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி கடந்த 4ம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் பந்தக்கால் நடப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, புதிய பிம்பங்கள் கரிகோலமும், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி நடக்கிறது. நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு யாகசாலை அலங்காரமும், மாலை 6 மணிக்கு அங்குரார்பணம், ரக்சாபந்தனம், கலாகர்ஷணம், கடம் யாகசாலை பிரவேசத்தைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது. 9ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, எஜமானர் சங்கல்பமும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி யாத்ரதானமும், 9 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.15 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், 9.30 மணிக்கு பரிவாரம் மற்றும் படவட்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை படவட்டம்மன் வழிபடுவோர் சங்கத்தினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.