பதிவு செய்த நாள்
11
ஜூன்
2015
04:06
மதுரை,மேலுõர் அருகேயுள்ள வெள்ளளூரை சேர்ந்த வல்லடிகாரர் கோயிலில், மாசி மாதம் நடைபெறும். கோயில் விழாவுக்கு முன்னதாக 15 நாட்கள் இப்பகுதியில் வீடுகளில் சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்துவது கிடையாது. மாமிச உணவு, தோசை, பரோட்டா போன்ற உணவு வகைகளுக்கு 15 நாட்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. விழா நடைபெறும் வரை இப்பகுதி ஹோட்டல்களில் சாப்பாடு, இட்லி, தவிர வேறு உணவுகள் விற்பது கிடையாது. வெள்ளளூர் வாசிகள் வெளியூரில் இருந்தாலும், இந்த விரதத்தைக் கடைபிடித்து வருகின்றனர். இப்பகுதி முஸ்லிம் மக்களும் இவ்விரதத்துக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். மன்னார்குடி-சேந்தங்குடி பேருந்து சாலையில் உள்ளது திருவெண்டுறை. இறைவன் அருள்மிகு திருவெண்டுறை நாதர். அம்மன் சத்யதாயதாக்ஷி வேனெடுங்கண்ணி அம்மை. பிருங்கி முனிவர் வண்டு வடிவம் கொண்டு இறைவனை மட்டும் வலம் வந்து, இறைவியின் சாபத்துக்கு ஆளாகி , வண்டு வடிவில் இருந்து இங்கு வழிபட்டு நற்கதி பெற்ற தலம். இப்போதும் இறைவனின் சன்னிதியில் வண்டின் ஒலி கேட்கின்றது என்பது சிறப்பு. திருமால் இத்தலத்து இறைவனைப் பூஜித்து சிவபூஜையின் சிறப்பை உலகுக்கு உணர்த்தினார். வித்யாதரர். பிரம்மன், துருவன், திருமால் ஆகியோர் வழிபட்ட தலம். சம்பந்தரின் பதிகம் பெற்றது. இங்கு பிட்சாடனர் திருமேனி சிறப்பு வாய்ந்தது. இத்தலத்தின் தல விருட்சம் வில்வம், தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.
நேபாளத்தில் சூரிய விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. தினமும் சூரியனின் முதல் கதிர், இக்கோயிலில் உள்ள கணேசர் விக்ரகத்தில் விழுகிறது. ராமபிரானின் புதல்வர்கள் லவன், குசன் இருவருக்கும் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு அருகில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரில் சரயூ நதிக்கரையில் ஒரு சிறிய ராமர் கோயில் உள்ளது. அக்கோயிலில் உள்ள ராமர் சிலை, தமிழக ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ள திருப்புல்லாணி என்ற ஊரில் மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்டதாகும்.