பதிவு செய்த நாள்
08
ஜூலை
2011
11:07
கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் பல கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்து வரும் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது. சேங்காலிபுரம் நாராயண தீஷிதர் புதல்வர் ராமதீஷீதர். இவர் இன்றும் பிரவசனம் செய்துகொண்டு வருபவர். இவரது புத்திரர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ்.நாமசங்கீர்த்தனமே நாதன் தாள் பற்றுவதற்கான நல்ல வ ழி என்பதை உலகெங்கும் பறைசாற்றிய ஞானானந்தசுவாமிகள் சீடரான குருஜி ஹரிதா ஸ் கிரி சுவாமிகளையும், ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பிரேமி மகராஜ் ஆகியோரை தமது குருவாக ஏற்று நாடெங்கும் நாமசங்கீர்த்தனத்தை நடத்தி வருபவர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ். வடமாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கனின் கோவிலை போன்று அனைத்து பக்தர்களும் கோவில் கர்ப்பகிரகத்தினுள் சென்று பகவானை தரிசிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார்.பண்டரிபுரத்திலிருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும் புதிய கோவிலில் எழுந்தருளுகின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தனை கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மனிகளின் கதை சிற்பங்கள், பொன் போன்ற ஒளிரும் மேல் விதானம் மடப்பள்ளி போன்றவைகள் தெய்வீகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது. ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்தே பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் வருகிற 15ம் தேதி நடக்கிறது.
நாளை 9ம் தேதி முதல் 15ம் தேதி முடிய 24 மணி நேரமும் நாமசங்கீர்த்தனம், சொற்பொழிவு, பக்திநடனம், இன்னிசை போன்றவை நடக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள், அண் ணா கிருஷ்ண பிரேமி சுவாமிகள் ஆகியோரின் அருளாசியுடன் 15ம் தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.05 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நட க்கிறது. சேங்காலிபுரம் ராமதீஷீதர் முன்னிலை வகிக்கிறார்.கோவில் திருப்பணி வேø லகளில் மஹாராஷ்டிரா ஸ்தபதி பாலாஜி, சென்னை ஸ்தபதி செல்வநாதன், பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். எங்கும் பார்க்கமுடியாத வகையில்பை பர் கிளாஸில் சீலிங் மோல்டு டெக்கரேஷன் செய்துள்ளனர். 100 கோடி விட்டல் நாமங்களை கீழே உள்ள அறையில் வைத்து அதன் மேலே சாமி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.