பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் சம்போடை கிராமத்தில் உள்ள மங்களாம்பிகை கோவிலில் 12.6.15 கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி, 12.6.15 முன்தினம் கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.கும்பாபிஷேக தினமானநேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனையும் தொடர்ந்து யாத்ராதானம், கலசம் புறப்பாடாகி 8:10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சங்கர் செய்திருந்தார்.