பதிவு செய்த நாள்
13
ஜூன்
2015
12:06
அவிநாசி: அவிநாசி அருகே, பராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நடைபெற்றது.வேட்டுவபாளையம் ஊராட்சி, அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ விநாயகர்,
ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீபெருமாள் மற்றும் ஸ்ரீபராசக்தி அம்மன் கோவில்களில் திருப்பணி நடைபெற்று,
கும்பாபிஷேக பூஜை, நேற்று முன்தினம் காலை துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் சுமந்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதன்பின், யாகசாலை பூஜைகள் துவங்கின.நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் நிறைவுகால யாக சாலை பூஜைகள் நடந்தன. அதன்பின், பூஜிக்கப்பட்ட கும்பங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, விமான கலசங்கள் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தனர். தச தானம், தச தரிசனம், மகாபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன.