காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட் டம் நடந்தது. காரைக்காலில் பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் வரும் 29ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 30ம் தேதி திருக்கல்யாணம், ஜூலை 1ம் தேதி மாங்கனி வீசும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் காமராஜர் வளாகத்தில் நடந்தது. கலெக்டர் வல்லவன் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் முகமது மன்சூர், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர்.திருவிழா நடக்கும் தெருக்களை நகராட்சி சுத்தமாக பராமரிக்க வேண்டும், சுவாமி செல்லும் சாலையில் உள்ள மரக் கிளைகளை அகற்ற வேண்டும்.மாங்கனி திருவிழாவிற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். சுவாமி வீதியுலா செல்லும் பாரதி யார் சாலை, மாதாகோவில் வீதிகள் உள்ளிட்ட சாலைகள் புனரமைக்க வேண்டும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் அகற்ற வேண்டும். முக்கிய இடங்களில் கேமரா வைக்க வேண்டும். மாங்கனி வீசும் போது கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.