செஞ்சி: மட்டப்பாறை கெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி தாலுகா மட்டப்பாறையில் புதிதாக கெங்கையம்மன் கோவில் கட்டி உள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் 12.6.15 நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கணபதி பூஜையும், 11 மணிக்கு சாமி கரிக்கோல ஊர்வலமும் நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு108 திரவிய ஹோமமும், 9 மணிக்கு .30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு சாமி வீதியுலா நடந்தது.