பதிவு செய்த நாள்
13
ஜூன்
2015
12:06
மண்டபம்: மண்டபம் மேற்கு தெருவில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய
அல்மஸ்ஜிதுர் ரிள்வான் ஜூம்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடந்தது. தாஜூல் இஸ்லாம் தலைமை வகித்தார். முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் பள்ளிவாசலை திறந்து வைத்தார். பள்ளிவாசல் இமாம், ஜாபர் சாதிக் யூஸீபி, மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர், அன்வர் அலி, முகைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசல் டிரஸ்டி ஷாஜஹான் மரைக்காயர், சீனி மரைக்காயர், அன்சாரி, அப்துல் ஒஜிர், முகம்மது உசேன், பேரூராட்சி கவுன்சிலர்கள் முபாரக், மைதீன், சீனிகாதர், தாருல் உலூம் சபீலுர் ரஷாத் அரபிக்கல்லூரி பேராசிரியர் சைபுத்தீன் ரஷாதி, மதுரை ஒத்தக்கடை அரபிக்கல்லூரி நிறுவனர் முகம்மது காசிம் பாகவி, ஜாஹிர் உசேன் மற்றும் இந்து மத முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.