பதிவு செய்த நாள்
15
ஜூன்
2015
02:06
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகா, வாழ்மானப்பாளையம் கீழுரில் நாககன்னி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முகூர்த்த கால் நடுதலும், கங்காணம் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த, 12ம் தேதி, கொள்ளிடம் ஆற்றிலிருந்து பக்தர்களால் புனிதநீர் எடுத்து வரப்பட்டது. 13ம் தேதி விக்னேஷ்வர பூஜையும், வாஸ்து சாந்தி, வாஸ்து பூஜைகள் நடைபெற்று, யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை, ஏழு மணிக்கு காட்டுக்கோவில் கும்பாபிஷேகமும், 7.45 மணிக்கு நாககன்னி அம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம், கோ பூஜை, மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் சுதாகர், பஞ்சாயத்து தலைவர்கள் அனந்தராமன், சொரூபராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.