Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஸ்வாதி ... ரமலான் சிந்தனைகள்1 புனித மாதமே வருக! ரமலான் சிந்தனைகள்1 புனித மாதமே வருக!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் அரங்கநாதர் கோவில் திருத்தேர் விழா!
எழுத்தின் அளவு:
சிங்கவரம் அரங்கநாதர் கோவில் திருத்தேர் விழா!

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2015
10:06

செஞ்சி: செஞ்சியை அடுத்த சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் 80 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருத்தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது, 700 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால அரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், இருந்த தேர் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. இதனால் பல ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடக்காமல் இருந்தது. சில ஆண்டுகளாக தற்காலிக தேர் அமைத்து பிரம்மோற்சவம் நடத்தினர்.இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை உதவியுடன், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 41 அடி உயரத்தில் புதிய தேர் வடிவமைத்து நேற்று தேர் திருவிழா நடந்தது.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவருக்கு திருமஞ்சனமும், சாமி வீதி உலாவும் நடந்தது. 16ம் தேதி இரவு பெரிய திருவடி எனும் கருட சேவை நிகழ்ச்சி நடந் தது. நேற்று காலை முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது.இதை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட பூதேவி, ஸ்ரீதேவி சமேத அரங்கநாதரை தேரில் ஏற்றினர். 9:00 மணிக்கு மங்கள வாத்தியம், செண்டை மேளம் முழுங்க திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. மாட வீதிகள் வழியாக தேர் பவனி வந்த போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கா, கோவிந்தா சரண கோஷத்துடன் வடம் பிடித்தனர்.

இதில் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேல், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், தி.மு.க., மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான், தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர் செஞ்சி சிவா, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் அரங்க ஏழுமலை, சிங்கவரம் ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் குணசேகர், ஏழுமலை, இளங்கீர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar