கரூர்: கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் கோவிலில் வரும் 11 ம் தேதி ஆஷாட ஏகாதசி திருவிழா வெகுசிறப்பாக நடக்கிறது. விழாவில், பெண்கள் உள்பட பக்தர்கள் கருவறைக்கு சென்று ஸ்வாமியை தொட்டு வணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவிலில் ஆஷாட திருவிழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ம் தேதி காலை 7 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து இரவு 10 மணி வரை, கருவறைக்கு சென்று ஸ்வாமி பாதங்களை பெண் பக்தர்கள் உள்பட அனைவரும் தொட்டு வணங்கலாம். மாலை 4 மணி மு தல் 6 மணி வரை திவ்ய நாம சங்கீர்த்தனம், மாலை 6.30 மணிக்கு நகர சங்கீர்த்தனத்துடன் ஸ்வாமி புறப்பாடு, 12 ம் தேதி காலை 6 மணிக்கு அமராவதி ஆற்றில் ஸ் வாமிக்கு தீர்த்தவாரி, மாலை 6 ம ணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஆஷாட ஏகாதசி விழா அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.