உடையப்பன் குடியிருப்பு நாராயணசுவாமி கோயில் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2015 11:06
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண தேர் திருவிழா 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. 19-ம் தேதி காலை ஆறு மணிக்கு கொடியேற்று விழா நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து தினமும் விழாவில் பணிவிடையும், அய்யா பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு ஒன்பது மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 29-ம் தேதி 11-ம் நாள் விழாவில் பகல் இரண்டு மணிக்கு செம்பவள பஞ்ச வர்ண தேர் பவனி நடக்கிறது. இதை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். விழாவில் நாட்களில் தினமும் அன்னதானம் நடக்கிறது.