பதிவு செய்த நாள்
19
ஜூன்
2015
11:06
சென்னிமலை:சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவில் மிகப்பழமையான சிவன் கோவிலாக கருதப்படும், பிரம்ம லிங்கேஸ்வர சுவாமி கோவில், மண்டலாபிஷேக பூஜை நிறைவு விழா மற்றும் 108 சங்காபிஷேக பெருவிழா நேற்று நடந்தது.அதிகாலை, 5.30 மணிக்கு தீர்த்த ஊர்வலமும், காலை, 7.30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, வருணா பூஜை, 108 சங்கு பூஜை, யாக பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. வடிவுள்ள மங்கை உடனமர், பிரம்மலிங்கேஸ்வர சுவாமிக்கு, மஹா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது.
பூஜைகளை அமிர்தலிங்க சிவாச்சாரியர், கோபி பிரபாகரசிவம் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர். கோவிலில், அன்னதானம் வழங்கப்பட்டது.