அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மசூதியில் தராவீஹ் சிறப்பு தொழுகை துவங்கியது.புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு அவலூர்பேட்டை மசூதியில், நேற்று இரவு 8:30 மணிக்கு இஷா தொழுகையுடன், 20 ரகாத் கொண்ட தராவீஹ் சிறப்பு கூட்டுத் தொழுகை நடந்தது. ஹஸரத் முகமத் மொக்திம் தொழுகையை நடத்தினார். இம்மாதம் முழுவதும் தராவீஹ் தொழுகை நடக்கிறது. இதில் முத்தவல்லி ஹாஜிபாஷா, ஹஸரத் முஸ்தகீம், முர்த்துஜா, மவுசன் சையத் ஷப்பி மற்றும் ஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து முதல் நாள் நோன்பும் துவங்கியது.