பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
10:06
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குரு பரிகார ஸ்தலமாக உள்ளது. குரு பகவான் கடக ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கு ஜூலை 5ம் தேதி பிரவேசம் செய்கிறார்.
இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு, இக் கோவிலில் குரு பகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை தொடங்கியது. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர்.
லட்சார்ச்சனை, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.குருபெயர்ச்சிக்கு பின், ஜூலை மாதம் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை, இரண்டாவது கட்டமாக லட்சார்ச்சனை நடக்கிறது.