பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
11:06
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள வேதநாயகி உடனுறை சாந்தநாத ஸ்வாமி கோவில், ஆனித் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி மற்றும் அம்மனை வழிபட்டு சென்றனர்.
திருவிழாவையொட்டி, தினமும் காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனையும் நடைபெறும். விழா நாட்களில், பல்வேறு வாகனங்களில், ஸ்வாமி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும், 29ம் தேதி நடைபெறும்.தொடர்ந்து, 1ம் தேதி தோளுக்கியானில் அம்மன் ஊர்வலமும், இரவு, 9 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறும். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயப்பரியா, புதுக்கோட்டை திருக்கோவில்கள் செயல் அலுவலர் கருணாகரன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஆலய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்கின்றனர்.