மீனாட்சி திருக்கல்யாணம் திறந்த வெளியில் நடத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2015 11:06
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயில் மீனாட்சி திருக்கல்யாணத்தை திறந்தவெளி அரங்கில் நடத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சொக்கநாதசுவாமி கோயில் உள்ளது. நூற்றாண்டு புகழ் வாய்ந்த இக் கோயில் ஆனி விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு துவங்கியது. 10 ம் நாள் திருக்கல்யாணம்,11 ம் நாள் தேரோட்டம் நடக்கும். திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடப்பதுண்டு இதை காண கட்டணம் செலுத்த வேண்டும். மண்டபம் நிறைந்த உடன் கதவுகளை மூடி விடுவர். இதனால் பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண முடியா த நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே போல் தான் நடக்கிறது. முக்கிய பிரமுர்கள், வி.ஐ.பி., க்கள் மட்டும் தான் பார்க்க முடிகிறது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு திருக்கல்யாணத்தை திறந்தவெளி அரங்கில் நடத்தினால் பக்தர்கள் அனைவரும் காண முடியும். இதற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, நாராயணி, நிர்வாக அதிகாரி,"" திருக்கல்யாணம் மண்டபத்தில் வைத்து தான் நடக்கும். வெளியில் இருக்கும் பக்தர்களுக்கு பெரிய ஸ்கிரீன் வைத்து விடியோ மூலம் காட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.