செஞ்சி : நரசிங்கராயன் பேட்டை எட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா நடந்தது. செஞ்சி தாலுகா நரசிங்கராயன் பேட்டை எட்டியாந்தாங்கல் ஏரிக்கரை கீழ் உள்ள எட்டியம்மன், மகா சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகத்தின் முதலாமாண்டு நிறைவு விழா நேற்று நடந்தது.இதை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாகனம், எஜமான மகா சங்கல்பம் நடந்தது. பகல் 12 மணிக்கு 108 திரவிய ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது. 1 மணிக்கு மகா அபிஷேகம், கலசாபிஷேகம், தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். பூஜைகளை லலிதா செல்வாம்பிகை கோவில் ஈஸ்வர சிவன் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர்.