திருநெல்வேலி: நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இந்த ஆண்டு ஆனித்தேரோட்ட விழா நேற்று காலை காலை 6.32-க்கு மேல் 7.02-க்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனித்திருவிழாவின் பத்து நாட்களும் சுவாமி, அம்பாள், வீதிஉலா நடக்கிறது. முக்கிய விழாவான 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் ஜூன் 30ல் நடக்கிறது.