மேலுார்: கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் இருந்த விநாயகர் சிலை ஜூன் 9ல் சிலரால் அகற்றப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பால் மீண்டும் அதே இடத்தில் சிலை வைக்கப்பட்டது. இதையொட்டி சிலையை புனிதப்படுத்துவதற்காக இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கருப்பு தலைமையில் பாலாபிஷேகம் நடந்தது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கருதி டி.எஸ்.பி., மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் முத்து, அம்பிகா, ராஜமோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் சிவா, பாலமுருகன், கருப்பு, அண்ணாத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.