புதுச்சேரி: வைத்திக்குப்பம் குரு அக்கா சுவாமிகள் கோவிலில், குரு பூஜை பெருவிழாவையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நடராஜப்பெருமானுக்கு திருமஞ்சனம் நடந்தது. குரு அக்கா சுவாமிகளுக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் சிறப்பு அதிகாரி மற்றும் குரு அக்கா சுவாமிகள் திருத்தொண்டு சபையினர் செய்திருந்தனர்.