Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
400 ஆண்டு பழமையான ஜெயவீர ஆஞ்சநேயர்! யாழுடன் இசைக்கும் பாடல்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
படிப்புச் செலவு பாடாய்படுகிறதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2015
03:06

பள்ளி, கல்லுõரிகளில் பிள்ளைகளைச் சேர்க்க கல்விச் செலவு கையைக் கடித்துக் கொண்டிருக்கும் காலம் இது. இந்த சமயத்தில், தேவையான பொருளாதார வளம் கிடைப்பதற்கு திருவாவடுதுறை மாசிலா மணீசுவரர் மற்றும் ஒப்பிலாமுலையம்மையை மனதில் நினைத்து பாட வேண்டிய பதிகம் இது. ஞானசம்பந்தர் இதை அருளியுள்ளார். இடரினும் தளரினும் எனது உறு நோய்தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்;கழல்தனில் அமுதொடு கலந்த நஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்அதுவோ உனது இன்னருள்?ஆவடுதுறை அரனே. வாழினும் சாவினும் வருந்தினும் போய்வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்;தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப்போழ் இளமதி வைத்த புண்ணியனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்அதுவோ உனது இன்னருள்?ஆவடுதுறை அரனே. நனவினும் கனவினும் நம்பா, உன்னைமனவினும் வழிபடல் மறவேன், அம்மான்புனல்வரி நறுங் கொன்றைப் போது அணிந்தகனல்எரி அனல்புல்கு கையவனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்அதுவோ உனது இன்னருள்?ஆவடுதுறை அரனே.

தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்அம்மலர் அடிஅலால், அரற்றாது என்நா;கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்மும்மதில் எரி எழ முனிந்தவனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே.
கையது வீழினும் கழிவு உறினும்செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்கொய் அணி நறுமலர் குலாய சென்னிகைஅணி மிடறு உடை மறையவனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்அதுவோ உனது இன்னருள்?ஆவடுதுறை அரனே.  வெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்எந்தாய், உன் அடிஅலால் ஏத்தாது, என் நா;ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்தசந்தவெண் பொடிஅணி சங்கரனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்அதுவோ உனது இன்னருள்?ஆவடுதுறை அரனே. வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்அப்பா உன் அடி அலால் அரற்றாது, என் நா;ஒப்புடை ஒருவனை உரு அழியஅப்படி அழல் எழ விழித்தவனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்அதுவோ உனது இன்னருள்?ஆவடுதுறை அரனே.

பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்சீர் உடைக் கழல் அலால், சிந்தை செய்யேன்;ஏர் உடை மணி முடி இராவணனைஆர் இடர் பட, வரை அடர்த்தவனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்அதுவோ உனது இன்னருள்?ஆவடுதுறை அரனே. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்ஒண்மலர் அடிஅலால் உரையாது, என் நா;கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்அதுவோ உனது இன்னருள்?ஆவடுதுறை அரனே. பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்அத்தா உன்அடி அலால் அரற்றாது என்நாபுத்தரும் சமணரும் புறன் உரைக்கப்பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே.இதுவே எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்அதுவோ உனது இன்னருள்?ஆவடுதுறை அரனே. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்தஇலைநுனை வேல்படை எம் இறையைநலம்மிகு ஞானசம் பந்தன் சொன்னவிலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார்வினை ஆயின நீங்கிப்போய்விண்ணவர் வியன் உலகம்நிலையாக முன்ஏறுவர்;நிலைமிசை நிலை இலரே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar