பத்துப்பாடல் நூல்களில் பெரும்பாணாற்றுப்படையை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னனைப் பாராட்டி எழுதிய நூல் இது. இவன் காஞ்சிபுரத்தை தலைமையிடாமாகக் கொண்டு, தொண்டை நாட்டு ஆண்டு வந்தவன். இதில் 300 அடிகள் உள்ளன. பேரியாழ் என்ற வாத்தியக்கருவியை இசைத்தபடியே, பாணன் ஒருவன் இந்த நூல் வரிகளைப் பாடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு பாணாறு என்ற பெயரும் உண்டு.