சேலம்: ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் முடிந்து மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பலவித மலர்களால் வருஷாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.