ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2011 05:07
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இக்கோயிலுக்கு ரூபாய் 41 லட்சம் செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கான முதல் கட்ட பணிகள் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க மதியம் வரை நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.