கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி மற்றும் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் அலங்காரத்தை தொடர்ந்து விநாயகர் மற்றும் நடராஜருக்க தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நந்திகேஸ்வரர் மற்றும் பாடலீஸ்வரருக்கு ஒரே நேரத்தில் அலங்கார அடுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பெரியநாயகி அம்மனுக்கு தீபாராதனையும், பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் கோவில் வெளி பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்த பின் நந்திகேஸ்வரருக்கு, பிரதோஷ நாயகருக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.