பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
12:06
கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உண்டியல் மூலம் ரூ. 7 லட்சத்து 69 ஆயிரத்து 619 கிடைத்தது. பழனி தண்டாயுபாணி கோயிலுக்கு உட்பட்ட உபகோயில்களாக விளங்கும் குறிஞ்சியாண்டவர் கோயில் மற்றும் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. பழனி கோயில் துணை ஆய்வாளர் ராஜமாணிக்கம் முன்னிலையில், குறிஞ்சியாண்டவர் கோயிலில் வைத்து காணிக்கை எண்ணப்பட்டது. இரண்டு கோயில்களிலும் வசூல் ரூ. 7 லட்சத்து 69 ஆயிரத்து 619.குறிஞ்சியாண்டவர் கோயிலில் ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 471ம், பன்னிரண்டு கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி, 90 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உண்டியலில், ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து148 இருந்தது. திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் உமா, கணக்கு அலுவலர் சம்பூர்ணம், கண்காணிப்பாளர்கள் முருகேசன், ராஜி, பழனி சென்டரல் கூட்டுறவு வங்கி கிளை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.