திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2015 05:06
திருநெல்வேலி: நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் இன்று காலை 511வது ஆண்டு ஆனிதேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திருநெல்வேலியின் நடுநாயகமாக விளங்கும் நெல்லையப்பர் கோயில், தமிழகத்தின் மிகப்பெரிய தேரினை கொண்ட சிவாலயமாகும். முக்கிய விழாவான, ஆனித்தேரோட்ட விழா கடந்த திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த எட்டு நாட்களும் தினமும் இரவில், சுவாமியும் அம்மனும் வீதிஉலா வந்தனர். 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று 30ம் தேதி துவங்கியது. அதிகாலை 3.40 மணிக்கு மேல் 4.10 மணிக்குள் சுவாமியும் அம்மனும் தேரில் எழுந்தருளினர். காலை 8.15 மணியளவில் திருத்தேரை வடம் பிடித்து துவக்கிவைத்தனர். சுவாமி தேர், அம்பாள் தேர்,சுப்பிரமணியர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியன இழுக்கப்பட்டன. தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.