மேட்டுப்பாளையம்: புனித அந்தோணியார் தேர்த் திருவிழா, மேட்டுப்பாளையத்தில் நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த, 21ம் தேதி கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை திருத்தலம் பங்கு பாதிரியார் ஜெரோம் திருப்பலியை நிறைவேற்றி, கொடியேற்றி வைத்தார். மூன்று நாட்கள் நடந்த நவநாள் விழாவில், பாதிரியார்கள் மோகன், தோமினிக், ஆன்டனி ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றி, நற்கருணை ஆசிர் வழங்கினர். திருவிழா திருப்பலி மற்றும் முதல் நற்கருணை விழாவை, பாதிரியார் ஜார்ஜ் ரொசாரியா தலைமையில், பவானி புனித மரியன்னை சர்ச் பங்கு பாதிரியார் ஜெய அருள்ராஜ் நிறைவேற்றினார். விழாவில் எட்டு சிறுவர், சிறுமியருக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவில் மின் அலங்கார தேர்பவனி நடந்தது.