ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2015 11:07
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா நடந்தது. ரிஷிவந்தியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் ÷ காவில் பிரமோற்சவம், கடந்த 22ம் தேதி துவங்கியது. நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலவருக்கும், சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. பூஜைகளை நாகராஜ், @சாமு குருக்கள் செய்தனர். கோவில் முன்பு கந்தவிலாஸ் ஜெயக்குமார் தலைமையில் மண்டக ப்படி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு முருக மூப்பர் வகையறாவினர் தலைமையில் கோவிலிலிருந்து மதியம் 2:10 மணிக்கு பக்தர்கள் தேரினை வடம் பிடித்தனர். தேரோடும் வீதிகள் வழியே சென்று, மாலை 4:35 மணிக்கு, தேர் நிலைக்கு வந்தடைந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.