தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றம் மற்றும் கா ப்பு கட்டுடன் துவங்கியது. எட்டு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜைகள் வீதி உலா நடந்தது. ஒன்பதாம் திருநாளான நேற்று தேரோட்டம் நடக்கவேண்டும். தேர் புதிப்பிப்பதற்காக பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் , இந்தாண்டு தேரோட்டத்திற்கு பதிலாக சொர்ணமூ ர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன், மற்றும் விநாயகர் பரிவார மூர்த்திகளும் சிறப்பான அலங்காரத்துடன் தனித்தனி சப்பரத்தில் திருவீதி உலா வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.