ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கம்பர் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா கடந்த ஜூன் 23 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆதாரனைகள் நடந்தன. இரவில் பெண்களின் கும்மியாட்டம், ஆண்களின் ஒயிலாட்டம் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் கடைசி நாளான நேற்று கோயிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். அரசூரணியில் உள்ள நீரில் முளைப்பாரிகளை கரைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.