கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா தலைமையில் நேற்று மாலை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் 6 லட்சத்து 47,980 ரூபாய் காணிக்கையாக இருந்தது. சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் ரூ.1 லட்சத்து 33,484 ம் காணிக்கையாக வரப்பெற்றுள்ளது. உண்டியல் எண்ணிக்கையின் து ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் உடனிருந்தனர்.