பதிவு செய்த நாள்
04
ஜூலை
2015
11:07
காரிமங்கலம்: காரிமங்கலம், அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில்
குருபெயர்ச்சியை முன்னிட்டு, நாளை இரவு, 9 மணிக்கு கணபதி ஹோமம் உட்பட பல்வேறு
சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. 11 மணிக்கு மேல் குரு பகவானுக்கு பல்வேறு சிறப்பு
அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. ரிஷபம், மிதுனம், கன்னி, சிம்மம், மகரம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளை சேர்ந்த பொதுமக்கள் குருபெயர்ச்சியில் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர்
கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி நாளை இரவு, 9 மணிக்கு சிறப்பு ஹோமங்களும், 11
மணிக்கு மேல் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
தர்மபுரி நெசவாளர் நகர் சக்தி விநாயகர் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில்,
குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், சாலை விநாயகர் கோவில், அப்பாவு நகர் விநாயகர் கோவில், பாலக்கோடு ஞானபிள்ளையார் கோவில், அரூர் தீர்த்தகிரீஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில், ராசுவீதி சிவன்கோவில், காட்டினாயனப்பள்ளி சிவசுப்பிரமணிய ஸ்வாமி, வரசித்தி விநாயகர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.