விருதுநகர்: செங்குன்றாபுரத்தில் லிங்கம்மாள் கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தை தனிநபர்கள் நால்வர் சொந்தம் கொண்டாடுவதாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் குந்தலப்பட்டியைச் சேர்ந்த லிங்கம்மாள் கோயில் உள்ளிட்ட கோயில்களின் டிரஸ்ட் தலைவர் வேல்சாமி, ஊர்த்தலைவர் நல்லையா தலைமையில் மக்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜாராமனிடம் மனு அளித்தனர்.அதில்," ஐந்து கோயில்களுக்கு பாத்தியப்பட்ட டிரஸ்ட் சார்பாக லிங்கம்மாள் கோயிலில் வழிபடுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.எங்களை அவமரியாதையாகவும், மிரட்டும் வகையில் பேசிய சூலக்கரை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,என கூறப்பட்டுள்ளது. இதே மனு மகேஷ்வரன் எஸ்.பி.,யிடமும் அளிக்கப்பட்டது.