செஞ்சி: செத்தவரை சிவஜோதி மோனசித்தர் ஆசிரமத்தில் குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு ஹோமம் நடந்தது. செஞ்சி தாலுகா செத்தவரை சிவ ஜோதி மோனசித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சியம்மன் உடனாகிய சொக்கநாத பெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இக்கோவிலில் உள்ள குரு தட்சணாமூர்த்திக்கு சிவஜோதி மோனசித்தர் தலைமையில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 11.02 வரையில் சிறப்பு ஹோமம் நடந்தது. இரவு 11.02 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பரிகார ராசிதாரர்களுக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.