திருக்கனுார் : கூனிச்சம்பட்டு பூதநாதீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டில் காமாட்சி சமேத பூதநாதீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, இரவு 8:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.தொடர்ந்து, 9:30 மணிக்கு நவக்கிரக ஹோமம், இரவு 10:00 மணிக்கு குருவுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 11:05 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை ராம சுப்பிரமணியன் குருக்கள் செய்திருந்தார்.