Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » அஷ்டாங்க யோகம்
அஷ்டாங்க யோகம்
எழுத்தின் அளவு:
அஷ்டாங்க யோகம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
15:53

1 கல்யதாம் மம குருஷ்வ தாவதீம்
கல்யதே பவத் உபாஸனம் யயா
ஸ்பஷ்டம் அஷ்ட வித யோகசர்யயா
புஷ்டயா ஆசு தவ துஷ்டிம் ஆப்னுயாம்

பொருள்: குருவாயூரப்பா! உன்னை வணங்க எனது உடலுக்கு எந்த அளவு ஆரோக்யம் இருக்க வேண்டுமோ அதனை மட்டும் அளிப்பாயாக. அதன் மூலம் நான் அஷ்டாங்க யோகம் புரிந்து உனது அருளைப் பெற்று விடுவேன்.

2 ப்ரஹ்மசர்ய த்ருடதாதிபி: யமை
ஆராப்லவாதி நியமைச்ச பாவிதா;
குர்மஹே த்ருடம் அமீ ஸுகாஸனம்
பங்கஜாத்யம் அபி வா பவத்பரா:

பொருள்: குருவாயூரப்பனே! உனது அருளையே நம்பியுள்ள நாங்கள் சுத்தமானவர்களாக இருப்போம். எப்படி? ப்ரம்மச்சர்யம் போன்ற யமம், குளித்தல் போன்ற நியமம், பத்மாசனம், ஸுகாஸனம் போன்ற ஆசனம் ஆகிய இவற்றால் ஆகும்.

3 தாரம் அந்தர் அநுசிந்த்ய ஸந்ததம்
ப்ராணவாயும் அபியம்ய நிர்மல:
இந்த்ரியாணி விஷயாத் அபஹ்ருத்ய
ஆஸ்மஹே பவத் உபாசனோந்முகா:

பொருள்: ஸ்ரீ அப்பனே! நாங்கள் மேலே கூறியபடி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தை மனதால் த்யானித்தும் ப்ராணாயாமம் செய்தும் எங்களை பரிசுத்தம் ஆனவர்களாக மாற்றிக் கொள்கிறோம். மேலும் இந்த்ரியங்களை அவற்றுக்கு உரிய விஷயங்களில் இருந்து திசை திருப்பி உன்னை உபாஸிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளோம்.

4 அஸ்புடே வபுஷி தே ப்ரயத்னதோ
தாரயேம திஷணாம் முஹுர் முஹு:
தேந பக்திரஸம் அந்த: ஆர்த்ரதாம்
உத்வஹேம பவதங்க்ரி சிந்தகா:

பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய திருமேனி எப்படி உள்ளது என்று வேதங்களாலும் சரிவர விளக்க இயலாது. இதனால், அந்தத் திருமேனி எங்கள் மனதில் தெளிவாகத் தோன்றி இருக்க மீண்டும் மீண்டும் மனதை ஒருநிலைப்படுத்துவோம். இதன் மூலம் உனது திருவடியைத் த்யானிக்கும் பேறு பெற்று, பக்தி அனுபவமும், இதய நெகிழ்வும் அடைவோம்.

5 விஸ்புடாவயவ பேத ஸுந்தரம்
த்வத் வபு: ஸுசிர சீலனாவசாத்
அச்ரமம் மனஸி சிந்தயாமஹே
த்யானயோக நிரதா: த்வத் ஆச்ரயா:

பொருள்: ஸ்ரீஅப்பனே! உன்னைக் குறித்து நாங்கள் த்யானத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அதிகமான நாட்கள் த்யானித்து அதன் பலனாக உனது திருமேனியில் உள்ள பல்வேறு உறுப்புகளின் எழிலையும் அனுபவிப்போமாக. அதன் பின்னர் உனது திருமேனி எங்கள் உள்ளத்தில் என்றும் த்யானப் பொருளாக நிற்கும்.

6. த்யாயதாம் ஸகல மூர்த்திம் ஈத்ருசீம்
உன்மிஷன் மதுரதா ஹ்ருத ஆத்மனாம்
ஸாந்தர மோதரஸ ரூபம் ஆந்தரம்
ப்ரஹ்ம ரூபம் அயி தே அவபாஸதே

பொருள்: குருவாயூரப்பனே! இப்படியாக உனது பூர்ணமான திருமேனியை மனதில் எப்போதும் த்யானிப்பவர்கள் அந்த அழகினால் மனதைப் பறிகொடுக்கின்றனர். இதன் பின்னர் உனது ஆனந்தமே உருவான ப்ரஹ்ம ரூபமானது என்றும் அவர்கள் மனதில் ஒளிவீசிக்கொண்டு விளங்குகிறது.

7 தத் ஸமாஸ்வ தனரூபிணீம் ஸ்திதிம்
த்வத் ஸமாதி மயி விச்வ நாயக
ஆச்ரிதா புனரத: பரிச்யுதௌ
ஆரமேமஹி ச தாரணாதிகம்

பொருள்: குருவாயூரப்பா! உலகத்தின் நாயகனே! கடந்த ஸ்லோகத்தில் கூறிய நிலையானது ஸமாதி நிலையாகும். அதனை அடைந்து பின்னர் அதில் இருந்து சற்று சரிவு ஏற்பட்டாலும் மீண்டும் தாரணை செய்வோம்.

இத்தம் அப்யஸன நிர்ப்பரோல்லஸத் த்வத்
பராத்மஸுக கல்பி தோத்ஸவா:
முக்த பக்த குல மவுலிதாம்
கதா: ஸஞ்சரேம சுகநாரதாதிவத்

பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக மீண்டும் த்யானம் முதலியவற்றைப் பின்பற்றுவதால் உன்னுடைய ப்ரஹ்மரூபம் நீங்காமல் உள்ளது. இதனால் மிகுந்த ஆனந்தத்தில் மூழ்கி உள்ளோம். இதன் விளைவாக பக்தர்களின் சிறந்து விளங்கி, நாரதர், சுகமுனிவர் போன்றவர்களைப் போல் எங்கும் சென்று வருவோம்.

9 த்வத் ஸமாதி விஜயே து ய: புன:
மங்ஷு மோக்ஷரஸிக: க்ரமேண வா
யோகவச்யம் அநிலம் ஷடாச்ரயை:
உன்னயதி அஜ ஸுஷும்னயா சனை;

பொருள்: குருவாயூரப்பா! பிறப்பில்லாதவனே! இப்படியாக உன்னிடம் ஸமாதி நிலையை அடைந்த யோகிகள் மோட்ச முக்தியோ அல்லது க்ரம முக்தியோ (தெய்வீகமான பிறப்புகளை பெறுவது) அடைய விரும்புகின்றனர். இதற்காக ப்ராணவாயுவை தனது சூட்சும நாடி வழியாக ஆறுவிதமான ஆதாரங்களைக் கடந்து மெதுவாக மேலே எழுப்பிச் செல்கிறார்கள். (ஆறு ஆதாரங்கள் - முதுகெலும்பில் உள்ளவை - ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞை மற்றும் மூலாதாரம்).

லிங்கதேஹம் அபி ஸந்த்யஜன் அதோ
லீயதே த்வயி பரே நிராக்ரஹ:
ஊர்த்வ லோக குதுகீது மூர்த்த:
ஸார்தம் ஏவ கரணை: நிரீயதே

பொருள்: ஸ்ரீஅப்பனே! மோட்சத்தை விரும்பியவன் அனைத்து விருப்பங்களையும் விடுவித்து, ஆறு ஆதாரங்களையும் கடந்து, இந்த உடலையும் விடுத்து உன்னை வந்து சேர்கிறான். க்ரம முக்தி விரும்பியவன். தன்னுடைய ஐந்து ப்ராணன்கள், ஐந்து கர்ம இந்த்ரியங்கள் (வாக்கு, பாதம், கை, பாயு (மல மூத்திரம் உள்ள), உபஸ்தம் (மர்ம குறிகள்), ஐந்து ஞான இந்த்ரியங்கள் (மெய், கண், வாய், மூக்கு, காது), மனம், புத்தி ஆகியவற்றுடன் கூடிய இந்த உடலுடன் தலைவழியே வெளிக் கிளம்புகிறான்.

11 அக்னி வாஸர வலர்க்ஷ பக்ஷகை:
உத்தராயண ஜுஷா ச தைவதை:
ப்ராபிதோ ரவிபதம் பவத்பரோ
மோதவான் த்ருவபதாந்த மீயதே

பொருள்: ஸ்ரீ அப்பனே! உன்னுடைய பக்தன் நெருப்பு, பகல் நேரம், சுக்லபக்ஷம், உத்தராயணம் ஆகிய தேவதைகளால் எடுத்துச் செல்லப்பட்டு சூரிய மண்டலத்தை அடைகிறான். அங்கு மகிழ்ச்சியுடன் உள்ள அவன் பின்னர் த்ருவலோகம் செல்கிறான்.

12 ஆஸ்த்தித: அத மஹராலயே யதா
சேஷவக்த்ர தஹநோஷ்மணா அர்த்யதே
ஈயதே பவதுபாச்ரய: ததா வேதஸ;
பதபத: புரைவ வா

பொருள்: குருவாயூரப்பனே! த்ருவலோகம் சென்ற பின்னர் அங்கிருந்து அவன் மஹர்லோகம் அடைகிறான். ஆதிசேஷனின் முகங்களில் இருந்து வெளிவரும் உஷ்ணக் காற்றானது (ப்ரளயத்தின் போது) இந்த ப்ரபஞ்சத்தையே தகிக்கும். அதற்கு முன்பாகவே உனது பக்தன் மஹர் லோகத்தில் இருந்து கிளம்பி ப்ரம்ம லோகம் செல்கிறான்.

13 தத்ர வா தவபதே அதவா வஸந்
ப்ராக்ருத ப்ரலய ஏதி முக்ததாம்
ஸ்வேச்சயா கலுபுராபி முச்யதே
ஸம்விபித்ய ஜகதண்டம் ஓஜஸா

பொருள்: ஸ்ரீ அப்பனே! இப்படியாக உனது பக்தன் மஹர் லோகத்தில் (அல்லது வைகுண்டத்தில்) வசித்துக் கொண்டிருப்பான். பின்னர் மஹா ப்ரளயம் உண்டாகும்போது மோட்சம் அடைகிறான். அல்லது, தான் எப்போது விருப்பப்படுகிறானோ அப்போது தனது யோக சக்தியால் ப்ரம்மாண்டத்தைத் துளைத்து மோட்சம் அடைகிறான்.

14 தஸ்ய ச க்ஷிதிபயோ மஹோநிலத்யோ
மஹத் ப்ரக்ருதி ஸப்தகா வ்ருதீ:
தத்ததாத் மகதயா விசந் ஸுகி யாதி
தே பதம் அநாவ்ருதம் விபோ

பொருள்: எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! மேலே கூறியபடி ப்ரம்மாண்டத்தைத் துளைத்துச் செல்லும் உன் பக்தன், அந்தப் ப்ரம்மாண்டத்தைச் சுற்றியுள்ள பூமி, நீர், ஒளி, வாயு, ஆகாசம், மஹத், ப்ரக்ருதி, ஆகியவற்றைக் கடக்கின்றான். இதனைத் தாண்டி, எதுவும் சூழாமல் நின்றுள்ள உன்னிடம் வந்து முக்தி அடைகிறான்.

15 அர்ச்சிராதிகதிம் ஈத்ருசீம் வ்ரஜந்
விச்யுதிம் ந பஜதே ஜகத்பதே
ஸச்சிதாத்மக பவத்குணோதயாந்
உச்சரந்தம் அனிவேச பாஹிமாம்

பொருள்: ஸச்சிதானந்தனே! குருவாயூரப்பா! உலகின் பதியே! இப்படியாக அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று உன்னை அடையும் யாரும் நழுவுவதில்லை. இப்படியாக உனது திருக்கல்யாண குணங்களையே எண்ணி இருக்கும் என்னை நீ காப்பாயாக!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar