Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ப்ருது அவதாரம்
ப்ருது அவதாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
05:07

1. ஜாதஸ்ய த்ருவ குல ஏவ துங்ககீர்த்தே:
அங்கஸ்ய வ்யஜனி ஸுத: ஸ வேனநாமா
யத்தோஷ வ்யதிதமதி: ஸ ராஜவர்ய:
த்வத்பாதே விஹிதமனா வனம் கத: அபூத்

பொருள்: குருவாயூரப்பனே! துருவனின் குலத்தில் தோன்றியவனும், மிகுந்த புகழைப் பெற்றவனும் ஆகிய அங்கன் என்பவனுக்கு வேனன் என்ற பெயர் கொண்ட மகன் பிறந்தான். வேனனுடைய தீய நடத்தையைக் கண்டு மனம் நொந்துபோன அங்கன், உன் திருவடிகளில் மனம் செலுத்தப்பட்டவனாகக் காட்டிற்குச் சென்றான் அல்லவா?

2. பாப: அபி க்ஷிதிதல பாலனாய வேன:
பவுராத்யை: உபநிஹித: கடோர வீர்ய:
ஸர்வேப்ய: நிஜபலமேவ ஸம்ப்ரசம்ஸன்
பூசக்ரே தவ யஜனானி அயம் ந்யரௌத்ஸீத்

பொருள்: குருவாயூரப்பனே! மிகவும் கொடூரமான வீரம் உடையவனாகவும், பாவத்தை உடையவனாகவும் வேனன் இருந்தான். அப்படி இருந்தபோதிலும் நாட்டை ஆளும் நிலைக்காக, அந்நாட்டு மக்களால் பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டான். அவன் அனைவரிடமும் தனது வீரதீரங்களைப் பற்றியே புகழ்ந்து பேசியவண்ணம் இருந்தான். மேலும் உலகில் உனக்காக நடைபெறும் யாகங்கள் போன்றவற்றை தடை செய்தான்.

3. ஸம்ப்ராப்தே ஹித கதனாய தாபஸௌகே
மத்த: அன்ய: புவனபதி: ந கச்சன இதி
த்வந்நிந்தா வசன பரோ முனீச்வரை: தை:
சாபாக்னௌ சலபதசாம் அனாயி வேன:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு முறை வேனனுக்கு நல்ல உபதேசங்களைக் கூற முனிவர்கள் கூட்டமாக வந்தனர். அவர்களிடம், என்னைத் தவிர இந்த உலகின் நாயகன் யாரும் இல்லை என்றான். இது தவிர உன்னையும் தூற்ற ஆரம்பித்தான். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அவனை நெருப்பில் இட்ட விட்டில்பூச்சி போன்று அழித்தனர்.

4. தந்நாசாத் கல ஜன பீருகை: முனீந்த்ரை:
தன்மாத்ரா சிரபரி ரக்ஷித ததங்கே
த்யக்தாகே பரிமதிதாத் ஊருதண்டாத்
தோர்தண்டே பரிமதிதே த்வம் ஆவிராஸீ:

பொருள்: குருவாயூரப்பனே! தங்கள் சாபத்தால் வேனன் இறந்ததும் அவன் நாட்டைச் சேர்ந்த மக்களை எண்ணிய முனிவர்கள் பயந்தனர். வேனனின் தாய் அவனது உடலைப் பல நாட்கள் அப்படியே வைத்திருந்தாள். அவனது பாவங்களை நீக்குமாறு அவள் முனிவர்களிடம் வேண்டினான். அவர்கள் அவனது தொடையைக் கடைந்தனர். இதனால் அவன் பாவங்கள் நீங்கின. அப்போது அவன் கைகளில் இருந்து நீ தோன்றினாய்.

5. விக்யாத: ப்ருது; இதி தாபஸோ பதிஷ்டை:
ஸுதாத்யை: பரிணுதபாவி பூரிவீர்ய:
வேனார்த்யா கபலித ஸம்பதம் தரித்ரீம்
ஆக்ராந்தம் நிஜ தனுஷா ஸமாம் அகர்ஷீ:

பொருள்: குருவாயூரப்பனே! ப்ருது என்று பெயரும் புகழும் அடைந்த நீ எப்படி விளங்கினாய்? முனிவர்கள் பலரும் ஸுதர்கள் என்னும் ஸ்துதி பாடல்கள் பாடுபவர்களைக் கொண்டு உனது எதிர்கால லீலைகளைப் பாடப் பெற்றவனாக இருந்தாய். வேனனது கொடிய செயல்களால் அனைத்து வளங்களையும் பூதேவி மறைத்து வைத்திருந்தாள் மேடு பள்ளங்களாக உள்ள பூமியை கண்டு கோபம் கொண்ட  நீ, உனது வில்லினால் அந்தப் பூமியை சமதரையாக்கினாய் அல்லவா?

6. பூய: தாம் நிஜகுல முக்ய வதஸயுக்தை:
தேவாத்யை: ஸமுசித சாரு பாஜநேஷு
அன்னாதீனி அபிலஷிதானி யானி தானி
ஸ்வச்சந்தம் ஸுரபிதநூம் அதூதுஹ: த்வம்


பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் பூமியானது காமதேனு போல் உருவம் கொண்டது. (அந்த பசுவில் இருந்த பாலை எடுக்க - வளங்களை எடுக்க) நீ உனது குலத்தில் உள்ள முக்கியமானவர்களைக் கன்றுகளாக மாற்றி, அவர்களுக்கு உரிய பாத்திரங்களில் அன்னம் போன்று அவரவர்க்கு எது தேவையோ அதனைக் கறந்து அளித்தாய் அல்லவா?

7. ஆத்மாநம் யஜதி மகை: த்வயி த்ரிதாமந்
ஆரப்தே சததமே வாஜிமேத யாகே
ஸ்பர்த்தாலு: சதமக ஏத்ய நீசவேஷ
ஹ்ருத்வா அச்வம் தவத நயாத் பராஜித: அபூத்

பொருள்: குருவாயூரப்பனே! மூன்று மூர்த்திகளான ப்ரும்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் உருவமே (த்ரிதாமன்)! ப்ருதுவான நீ பல அச்வமேத யாகங்களை இயற்றினாய். அதில் உன்னையே ஆராதனை செய்யும்படியும் செய்தாய். இப்படியாக நீ நூறாவது அச்வமேத யாகம் செய்யத் தொடங்கும்போது இந்த்ரன் ஒரு கேவலமான வேடம் தரித்து (நீசவேஷ) அங்கு வந்தான். அவன் உன்னுடைய யாகக் குதிரையை அபகரித்தான். அப்போது உனது மகனால் அந்தக் குதிரை மீட்கப்பட்டபோது, இந்திரன் தோற்றான். இதனால் அவனை (ப்ருதுவின் மகனை) விஜிதாச்வன் என்று அழைத்தனர்.

8. தேவேந்த்ரம் முஹு: இதி வாஜிநம் ஹரந்தௌ
வந்ஹௌ தம் முனிவர மண்டலே ஜுஹுஷௌ
ருந்தாநே கமல பவே க்ரதோ: ஸமாப்தௌ
ஸாக்ஷாத் த்வம் மதுரிபும் ஜக்ஷதா: ஸ்வயம் ஸ்வம்

பொருள்: குருவாயூரப்பனே! தோற்கடிக்கப்பட்டான் என்றாலும் இந்திரன் மீண்டும் மீண்டும் யாகசாலைக்கு வந்து குதிரையை அபகரிக்க முயன்றான். இதனைக் கண்ட முனிவர்கள் கோபம் கொண்டு இந்திரனை யாகத்தீயில் அவிர்பாகமாக அளிக்க முடிவு செய்தனர். அதனை ப்ரும்மா வந்து தடுத்தான். அப்போது நீ உன்னையே எங்கும் நிறைந்துள்ள மஹா விஷ்ணுவாகக் கண்டாய் அல்லவா?

9. தத்தத்தம் வரம் உபலப்ய பக்திம் ஏகாம்
கங்காந்தே விஹிதபத: கதாபி தேவ
ஸ்த்ரஸ்த்தம் முநிநிவஹம் ஹதாநி சம்ஸன்
ஜக்ஷிக்ஷ்டா: ஸனகமுகாந் முனீன் புரஸ்தாத்

பொருள்: குருவாயூரப்பனே! பக்தியை மட்டுமே மஹாவிஷ்ணுவிடம் இருந்து வரமாகக் கேட்டாய். பின்னர் கங்கை, யமுனையின் சங்கமத்தில் வசித்து வந்தாய். ஒரு சமயம் அங்கு ஸத்ர யாகம் நடத்திய முனிவர்களுக்கு நீ பலவும் உபதேசம் செய்தாய். அப்போது அங்கு வந்த ஸனகாதி முனிவர்களை நீ பார்த்தாய் அல்லவா?

10. விஜ்ஞானம் ஸனகமுகோதிதம் ததான:
ஸ்வாத்மாநம் ஸ்வயம் அகம: வநாந்த ஸேவீ
தத் தாக்ருக் ப்ருது வபு: ஈச ஸத்வரம் மே
ரோகௌகம் ப்ரசமய வாதகேஹ வாஸின்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸநத்குமாரரால் உபதேசம் செய்யப்பட்ட ஞானத்தை நீ கைக்கொண்டு காட்டிற்குள் சென்று விட்டாய். அங்கு நீ ப்ரஹ்மத்தை உணர்ந்தாய். இப்படியாக ப்ருகுவின் உருவம் எடுத்தவனே! குருவாயூரில் உள்ளவனே! ஈசனே! எனது வ்யாதிகளை நீ சீக்கிரமாக நீக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar